மனசாட்சி
சிரிப்பு சிலநிமிடங்கள் நடப்பவைதான்.
சிலமணித் துளிகள்கூட தொடரலாம்.
ஆனால் நாட்கள் பல கடந்தும்
அடங்காச் சிரிப்பு!
என் நிழல்கள் என்னை பார்த்துச்
சிரிக்கும் சிரிப்பு,
அடங்குவது எப்போது? ஒன்றும் புரியவில்லை.
அடக்கவும் வழியில்லை.
மனிதனென்றால் ஒழித்துவிடலாம்.
நிழலை என்னவென்பது, என்னசெய்வது.
இறைவன் விட்ட வழிதான்.

