முதிர் கன்னி

பிறந்த போது என்னை பார்த்து மகிழ்ந்தவள்,
இன்று என்னை பார்க்கும் போதெல்லாம்
அழுதே சாகிறாள் - பெண்ணாய் நான் பிறந்ததற்கு!!!

இன்று வரை தெருவில் குனிந்தே செல்கிறேன் என்னை பிறர்
கேலி செய்வார்கள் என்பதற்காக அல்ல,

பெண் வீட்டாரிடம் வரதட்சணை கேட்கும்
முதுகெலும்பு இல்லாத ஆண் வர்க்கத்தை பார்க்க மனமில்லாமல்......

இருந்தும் இறைவனை பிராத்திக்கிறேன்
நல்ல உள்ளம் கொண்ட ஆணினம் பெருகிட,
பெண்களை பெற்றோரின் கண்ணீர் துடைத்திட....


எழுதியவர் : MeenakshiKannan (5-May-11, 2:07 pm)
சேர்த்தது : மீனாக்ஷி கண்ணன்
பார்வை : 553

மேலே