கண்ணீர் எனக்கு தேவை இல்லை !

என் சிரிப்பில்
அடங்கி இருக்கிறது
சோகங்கள் கண்ணீர்
சிந்த மனம் இல்லை

அப்படி சிந்த நான்
கோழையும் இல்லை
எத்தனை முறை
மிதி பட்டாலும்

போராடுவேன் மிதித்த
சுவடுகளை என்
ஆயிதமாய் கொண்டு
என்றாவது ஒரு

நாள் கண்ணீர்
சிந்துவேன் அது
என் வெற்றியின்
ஆனந்த கண்ணீர்

மட்டுமே மீண்டும்
தொடங்குவேன் என்
வாழ்க்கை பயணத்தை
என் சோகங்களும்

என்னை கண்டு
பயந்து ஓட நம்
வாழ்க்கை கூட சிற்பம்
ஆகலாம் தன்னம்பிக்கை
கொண்டு செதுக்க கற்றுக்கொண்டால் !

எழுதியவர் : dpa (5-May-11, 1:34 pm)
சேர்த்தது : deeps
பார்வை : 352

மேலே