மே தினம்
மேதினில் உழைக்கும் வர்க்கத்தின்
உன்னதத் திருநாள்
மழைமுகம் கண்ட பயிர் போல்
உழைக்கும் முகம் மலரும் நாள்
ரத்தமும் சேறுமாய் உருவான முதலாளித்துவத்தின்
முதுகெலும்பொடித்த நன்னாள்
எட்டு மணி நேர வேலைக்காக
செந்நீரால் சிவந்த சிகாகோ
கண்ணீரோடு தந்த நாள்
வர்க்கங்கள் ஒழியும் வரை
வர்க்கப்போராட்டம் ஓய்வதில்லை
உழைக்கும் வர்க்கம் முன்னிலும் வேகமாக
எழுகின்ற பொன்னாள்
எழுச்சி ஒன்றே
எழில் மிகு வரலாறு
என்று சொல்லும் நாள்
காட்டாற்றை தடுக்கின்ற
கயமைதான் உண்டோ !
உழைப்பாளி எழுச்சியை
தடுக்கின்ற உலகுதான் உண்டோ!
அவசரச் சட்டங்கள் ஆயிரம் வந்தாலும்
அவன் முன்னே அத்தனையும் தூளாகும்
இன்னும் கூட
நம் முன்னே பல கடமைகள்
சாதியின் பெயரால் மதத்தின் பெயரால்
கார்பரேட்டுக்களின் பெயரால்
கவ்ரவக் கொலைகள் கயமையின் சின்னங்களாய்
தகர்த்தெறி தடைக்கற்களை .