மீனமே நான்குஞ்சு மீன்
மீனக் கொடியுடைய மீனாட்சித் தாயேநீ
மீனக் கொடியுடையான் மீளவுயிர்ப் பித்தாயே
மீனக் கயல்விழியாள் எம்மையும் காத்தருள்வாய்
மீன(ம்)மே நான்குஞ்சு மீன்.
*******************************************************************
மீனக் கொடியுடைய மீனாட்சி-மதுரை ஆண்டாள்
மீனக் கொடியுடையான்-மன்மதன்
மீனக் கயல்விழியாள்-மீன் போன்ற கயல் விழி, கண் இமைக்காமல் காக்கும்
மீனாட்சி=மீன் கண் என்பர்
அவளே ராஜமாதங்கியுமாம்
மீன(ம்)மே-மீன்+அம்மே என்றும் மீனமே என்றும் பொருள்கொள்க
என் ராசி மீனம்