மனதோடு

||||||||||||||\\\||||||||||||||||||||||
தொடுவானம் தொடுத்தெழுதிய
வெண்பஞ்சின் சாயையை அறியா -என்
கண்ணிமைகளின் ஈரத்தினை நுகரும்
இராத்திரி நேரம் காத்தில துடிக்க

நிழல் சூழ்ந்த இருள் போல
இதயமும் ஏனோ ஏதேதோ தனியாக பேச
விழியின் திரையில் காவியமாய் வடித்த -என்
கவித் தொடரின் மாருதம் கனிவாக உரச

வான் நட்ச்சத்திரமும் கள்ளத் துயில் உறைய
நினைவுகள் மட்டும் மெதுவாக மயங்கி
கன்னங்களில் வடிகிறது உணர்வின்றி உயிராக

வளர்காற்றும் வானம்பாடியாக
காதோரத்தில் இசைமீட்டி இதழ் விரிக்க
தூரலில் தும்மிய எச்சில் போல
நிலவொளியும் நீள ஏங்குகிறது
மனதில் பற்றிய ஆசைத்தீயாக

வேறென்ன உறவோடு
உணர்வாக வாழ
கலை மதியும்
கவி படைத்தால்-இதனாலே
என் விழிநுனியும்
உனையே படைக்க
கனவுகள் கதவு திறக்கிறது
கவிதைத்துளியாக

\\\|||||||||||||||||||||||||||\\

எழுதியவர் : கீர்த்தனா (4-May-15, 2:18 pm)
Tanglish : manathoodu
பார்வை : 245

மேலே