என் அழகு தமிழச்சியே

உன் கைகள் அம்மி பிடித்து அரைக்கையில்
உன் சேலை இடையில்
உன் இடை எட்டிப்பார்க்கையில்
என் மனம் பேச்சின்றி உளர
என் கண்கள் பார்வையின்றி அலைய
என் கைகளுக்கு மட்டும் என்ன துணிச்சலடி
எட்டிப்பார்க்கும் உன் இடையை
எளிதாகத் தொட்டுப்பார்க்கயல்ல கிள்ளிப்பார்க்க
என்னைத் தினம் தினம் கிறங்கடிக்கும்
என் அழகு தமிழச்சியே
- இப்படிக்கு
உன் கணவன்

எழுதியவர் : ராஜா (4-May-15, 1:50 pm)
பார்வை : 373

மேலே