நேற்று பெய்த மழையில் பழமொழி கவிதைகள் -பாகம் - 1

நேற்று பெய்த மழையில்
இன்றைக்கு முளைத்த வித்து நான்!
நல் வித்தாய் இருந்தாலும்
நல் வளர்ச்சி காண்பேனா..?
உங்கள் புதுமைகள்
எங்களுக்கு புத்துயிர் தராது
எங்கள் வளமை
உங்களுக்கு வாழ்வே தரும்!
உங்கள் விஞ்ஞானம் வளர
எங்களை அழிப்பீர்கள்
எங்கள் அழிவோ
உங்களையே அழிக்கும்!
பிளவு பட்ட பாறை நிலத்தில்
பசுமைப் போராளியாய் உயிர் கொண்டேன்
நிலம் பசுமை போர்த்திக் கொள்ளுமோ...?
மனிதம் என்னை கொல்லுமோ ...?

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (4-May-15, 2:29 pm)
பார்வை : 195

மேலே