முறிந்தது முழுதும்

கண்மூடி முகம் புதைத்தேன்
கனவிலே உன் முகம்,
காலை கண்விழிக்கையில்
கணனியிளும் உன் முகம்,

எங்கே போவேன் -என்னவள்
நினைவில்லா தேசம் தேடி?
உன்னழகே புன்னகை என்றாய்
பறிபோனது புன்னகையும்,
பரவசமாய் பார்க்கின்றாய் என்றாய்,
பாழானது பார்வையும்,

தேவையற்ற வாதங்களும்
மூட நம்பிக்கைகளும்
முட்டாளாக்கியதே முழுமதி
நம் காதலை,

பிடிக்காதா செயலுக்காய்
போடும் சண்டைகள்,
பிடித்தவருடன் மட்டுமே
முடியும் என்று புரியல்லையே
புள்ள ஏன் இன்னும் உனக்கு,,,,!

பிடிக்கும் சண்டை எல்லாம்
பிரிவுக்கு மட்டுமென்றால்
உலகம் உருளுவதில்
உள்ளதோடி பயன் ஏதும்,,,,,,,,,?

உணர்ந்துகொள் உண்மையை
உயிர் பிரிந்த பின் உடலிருந்து
பயன் ஏதும் இல்லை,

எழுதியவர் : விதுர விழியான் (7-May-15, 11:57 pm)
சேர்த்தது : விதுர விழியான்
பார்வை : 108

மேலே