வேர்கள்
நீரைத்தேடும்
வேர்கள் இல்லையெனில்
வாசம் வீசும்
மலர்கள் மலருமா?
வேராக இருக்கும்
பெற்றோரை வேறாக
நினைக்காதீர்!
உன் வாழ்விற்காக
உழைத்தவர்களை
உதறித்தள்ளாதே!
நீ வேராக இருக்கும்
வாழ்விலும் மலர்களாக
இருக்கும் உன் மழலைகள்
நாளை உன்னை
வீசி எறிந்தால்?
உன் வேர்களுக்கு
நன்றி பாராட்ட வேண்டாம்!
நாலு சொட்டு
தண்ணீராவது ஊற்று!
வாழும் வரையில்
வாழ்க்கையில் வெல்வாய்!