தவிப்பு

இன்று முதல்
இந்த வயலினை நான்
இசைக்க போவதில்லை...........
இந்த
மரத்தின் நிழல் கூட
என் மேல் நெருப்பாய்
விழுகிறது.............
காரணம் காதல் என்றால்
அது எனக்கு இனி
தேவை இல்லை........
என்னை தனிமையில்
விட்டு விட்டு
சென்றவன்
இனி வருவான்
என்ற நம்பிக்கை என்னிடம் இல்லை

ஒரு வேளை
அவன் வந்து விட்டால்
என் இறப்பு மட்டுமே
பதில் சொல்லும் என
நினைக்காதிர்கள்.........

என் மறு பிறப்பும்
அவனுக்கு பதில் சொல்லும்
என் தவிப்பினை..................

எழுதியவர் : (9-May-15, 1:51 pm)
Tanglish : thavippu
பார்வை : 126

மேலே