நீ தேய்ந்த நாட்கள்

இறைவனின் படைப்பாய் உலகில்
அற்ப துளியில் அழகாய்

வேதனையுடன் என்னையும் சுமந்தால்
சோதனைகள் பல துவளவில்லை

சுமையாக எனை நினைக்கவில்லை
சுகமாக சுமந்தால் கருவறையில்

அவள் எனக்காக உறங்காத நாட்கள்
அவள் சுவாசத்தில் என் பரிமாணம்

ஈடு செய்ய முடியாத அவள் தியாகம்
வாழ் நாளும் போதாது அரவணைக்க

நிறமும் , அழகும் ஒரு பொருட்டல்ல
நிஜமான பாசம் என்றும் நிழலாய்

மருந்து உண்டால் எனக்காக அன்றும்
மறந்து விடவில்லை நேசிப்பதில் இன்றும்

வாரிசை தந்தால் நல்ல கணவனுக்கு
தந்தை வாழ்க்கை தந்தான் பிள்ளைகளுக்கு

மண்ணறை செல்லும் வரை மறையாது
தாய் பாசம் என்றுமே குறையாது

என் அன்னை !

அவளுக்காக வாழ்ந்த நாட்களை விட
எனக்காக தேய்ந்த நாட்கள் அதிகம்

கவிஞர்:இறைநேசன்.

எழுதியவர் : கவிஞர்:இறைநேசன் (10-May-15, 5:10 pm)
சேர்த்தது : கவிஇறைநேசன்
பார்வை : 66

மேலே