பள்ளி திறப்பு
அக்கினிச் சிறகுகளை
பள்ளிக் கதவுகள்
பயமுறுத்துகின்றன?!....
பத்திரிகை விளம்பரத்திற்கு
செலவழித்த பணத்தை
ஏழை மாணவர்களின்
படிப்பிற்கு செலவழித்து இருக்கலாம்?!....
வரதட்சணையை விட
பல மடங்கு அதிகம்
பள்ளி கல்விக் கட்டணம்?!.....
காலைக் கடனை விட
கல்விக் கடன்தான் அதிவேகமாய்
தூக்கம் கலைக்கிறது
அயர்ந்துறங்கும் அப்பாவை?!....
தம்பியின்
பள்ளி இறுதி தேர்வு முடிவில் இருக்கிறது
அக்காவின் திருமண முகூர்த்ததிற்க்கான முகாந்திரம்?!.....
மரணப் படுக்கையில் இருக்கும்
பாட்டியின் ஆயுளை நீட்டிக்கிறது -பேத்தியின்
உயிரியல் மதிப்பெண்கள்?!.....