அன்னையர் தினம் - முதியோர் இல்லத்தில் - கற்குவேல் பா

அன்னையர் தினம் - முதியோர் இல்லத்தில்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஏனோ தெரியவில்லை ..
மெதுவாய் நடக்கும் ,
அவனது கால்கள் ..

கண்களில் கூட ..
சிலதுளி நீர் ,
சுரந்து மடிந்திருந்தது ..

கையினில் பையில் ,
பழமும் அவலும் ..
அவளுக்கு பிடித்திருக்கலாம் ?

இரக்கம் இருந்தும் ..
இறுக்கமான மனதுடன் ,
அவளது அவன் ..

அடைந்த இடம் ,
அன்னையர் இல்லம் ..
வெளியேற்றப்பட்ட ,
அன்னைகளுக்கான !!!

தளர்ந்த நடை ..
புன்னகை முகத்துடன் ,
அவளது வருகை ..

" ஏன் ராசா ,
எப்படி இருக்க ..
எல்லோரும் நலம்தானே "

என்றவளின் கேள்விக்கு ..
அவனது பதில் ,
கண்ணீராக இருக்கக்கூடும் ..

" இந்தாம்மா ,
உனக்கு பிடிக்குமேன்னு ..
என்று இழுக்க "

" இதெல்லாம் எதுக்குப்பா ..
உன்னப் பார்த்தாலே ,
ஆத்தாவுக்கு நூறுவயசு "

மீண்டும் ஒருமுறை - அவனில்
சுரக்கத் தயங்காது ,
கண்ணீர் சுரப்பிகள் ..

" பேராண்டிய ஒருநாள்
கூட்டி வாப்பா " - என்ற
அவளது வார்த்தைகளும் ..

" உங்க அம்மாட்ட
பையனை கூட்டிபோற ,
வேலை வச்சுக்காதிங்க " - என்ற

மனைவியின் வார்த்தைகளும் ,
மனதினில் யுத்தமிடலாம் ..
ஒருவேளை ???

-- கற்குவேல் . பா --

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (10-May-15, 4:43 pm)
பார்வை : 156

மேலே