பள்ளி திறப்பு

அம்மாவின் அம்மனுக்கான வேண்டுதல்
உண்டியல் உடைக்கப்பட்டது?!.....

சிறு சேமிப்பாய் மிஞ்சும்
சிலிண்டர் மானியத் தொகையின்
மிச்சசொச்சம்?!.....

அடகு வைத்த நகை
மீட்கப்பட்டது விற்பதற்காக?!.....

மொட்டு வகுப்பு குழந்தைக்கு
இலவச பயிற்சி வகுப்பு
புத்தகப் பை சுமக்க?!......

எட்டில் ஒன்றானது
ஒருநாள் அப்பாவின்
சிகிரெட்டின் எண்ணிக்கை?!......

நோட்டு புத்தகங்களின் விலை உயர்வு?!.....
பள்ளி சீருடைகளின் புதிய எண்ணிக்கையை
குறைத்தாலும் குறைக்கலாம்?!.....

அப்பாவின்
பெரிய வண்டி கனவு
வழக்கம் போல
அடுத்த வருடத்தை நோக்கி?!.....

தன்னை விட
அதிக மதிப்பெண்
எடுத்த தம்பிக்காக - தன் படிப்பைத்
தாரைவார்த்தான் பாசமுள்ள அண்ணன்?!.....

எழுதியவர் : வைகை அழகரசு முத்துலாபுரம (10-May-15, 4:33 pm)
Tanglish : palli thirappu
பார்வை : 180

மேலே