என்றுமே எங்களுக்கு அன்னையர் தினம் தான்
"என்றுமே எங்களுக்கு அன்னையர் தினம் தான் "
-----------------------------------------------------
நான் தாயானபோது ..
தாயின் மகத்துவம் உணர்தேன் !
தனிமையில் குழந்தை வளர்க்கும் போது ...
தாயின் தனித்துவம் அறிந்தேன் !
பெண்ணாய் பிறந்தது பெருமையாக கர்வம் கொள்ளலாம்...
பிள்ளை பேறு காலத்தில் ..
உன் வலியை நானும் உணர்ந்ததால் என்னவோ ..
நான் பிறக்கும் போதே அழுதேனோ ..
அன்னையர் தினமாம் இன்று ..
யார் சொன்னது ? அமோதிக்கிறேன் ,
கண்டிக்கிறேன் எதிர்ப்பு தெரிவிப்பேன்...
ஒரு நாள் மட்டும் கொண்டாட இது
மற்ற விழா அல்ல ..
உயிரை கொடுத்த உண்ணதமான ஒரு ஆத்மார்த்தமான நம் தாயிற்காக ஒரு நாள் போதுமா ?
உயிர் உள்ளவரை உனக்காக வாழ்வேன் அம்மா !
என்றுமே எங்களுக்கு அன்னையர் தினம் தான் ...
-by மஜபா .