பள்ளி திறப்பு

மகனின் தோல்விக்கு
மருந்து போட்டது
மருமகளின் தோல்வி செய்தி?!......

வழிகளின்
வலிகளில்
விழி பிதுங்கி நிற்கின்றார்கள்?!.....
கட் ஆப் மார்க்
எட்டாமல் போனவர்கள்?!.....

கடவுளுக்கு
முடிந்து போட்ட காணிக்கைக் காசில்
மகனுக்கும் மகளுக்கும் மை கசியாத
நல்ல பேனா வாங்கி இருக்கலாம்?!.....

பதிலே சொல்லாத
கடவுளிடம் கோரிக்கை வைக்கும்
பெற்றோர் பெருந்தகைகளே?!.....
படைப்புக் கடவுளான
ஆசிரியர்களை மறந்ததேன்?!.....

வாசிப்பின் வசம் சுவாசம்
என்பதை உணராதவரை
மனப்பாடமும் வீட்டுப் பாடமும்
தொடர்ந்து தொல்லை கொடுத்தே தீரும்?!......

எழுதியவர் : வைகை அழகரசு முத்துலாபுரம (10-May-15, 5:15 pm)
Tanglish : palli thirappu
பார்வை : 163

மேலே