சீனாவின் ஆயுத பட்ஜெட் ஓகேஅதிக அளவு நிதி ஒதுக்குவதும் ஓகேஆனால்
சீனாவின் ஆயுத பட்ஜெட் ஓகே....அதிக அளவு நிதி ஒதுக்குவதும் ஓகே....ஆனால்...?
கடந்த ஆண்டு இந்தியாவின் ராணுவ பட்ஜெட் ரூ .2 லட்சத்து 36 ஆயிரத்து 840 கோடியாக இருந்தது.
சீனாவின் ராணுவ பட்ஜெட் ரூ. 8 லட்சத்து 45 ஆயிரத்து 60 கோடியாக இருந்தது.
இந்தியாவை விட 3 மடங்கு அதிகம் ஆகும். கடந்த பல ஆண்டுகளாகவே, சீனா தனது ராணுவத்துக்கு ஒதுக்கும் தொகையை அதிகரித்து வருவதாகவும்.....
தற்போது அமெரிக்காவின் நலன்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் இத்தொகை உயர்ந்து விட்டதாகவும் அந்த அறிக்கையில் ‘பென்டகன்‘ கூறியுள்ளது.
மேலும் சீனாவிடம் இருந்து ஆசியாவிலேயே அதிக ஆயுதம் வாங்கும் நாடாக பாகிஸ்தான் உள்ளது....கிடக்கட்டும் இவைகள் எல்லாம்...
சீனா..வின் ராணுவ பட்ஜெட் ஓகே...ஏனென்றால் உலக ஆதிக்கத்துக்கான போட்டி ஒரு காரணமாக இருக்கலாம்....ஆனால்..?
பாகிஸ்தான் அதிக அளவு ராணுவத்துக்கு செலவிடுவது எதற்கு...?
கமிஷன் மற்றும் எல்லையில் யுத்தம் நடத்தி பழங்குடி மற்றும் நாட்டு மக்களை ஒடுக்குவது என்று இருக்கும்...?
இந்தியா ஏன் அதிக அளவு ராணுவத்துக்கு நிதி ஒதுக்குகிறது...? என்ன காரணமாக இருக்கும்...?
- சங்கிலிக்கருப்பு -

