நினைவுப் பரிசு

என் வாழ்க்கை வாசலில்
இதமான இளங்கானம்
ரகசியமாக ஒலிக்கிறது...
என் மனமும் கேட்டது அதை
என் மதியும் கேட்டது

என்னுள் விளக்கமில்லாத
உணர்வு விளைந்தது
உள்ளில் எழுந்ததேதோ
என்னை விழிக்கச்செய்தது

பழக்கம் தவறாமல்
வழக்கம் போல்
என்னைக் காண
என் காதலி வந்தாள்
எனக்காக
புன்னகயைத் தந்தாள்
பெற்றுக்கொண்டேன் நான்
மகிழ்ச்சிக்கொண்டேன் நான்

அவள் என்னிடம்
"நம் காதல் நினைவாக
எனக்கொரு பரிசைத்தா நனவாக"
என்று கேட்டாள்
நான் என் எண்ணத்தை எடுத்து
அவளிடம் கொடுத்தேன்
அதை வாங்கிக்கொண்டு
அவள் சொன்னாள்
"என்னை எனக்கே தருகிறாயே"
என்று

எழுதியவர் : ரோச்சிஷ்மான் (11-May-15, 2:29 pm)
சேர்த்தது : ரோச்சிஷ்மான்
Tanglish : ninaivup parisu
பார்வை : 128

மேலே