பன்னிரண்டு வினாடிகள் -ரகு

முதன் முதலாய்
உன்னைப் பார்க்கும் போழ்து
கசாப்புக் கடையில்
நின்றிருந்தேன் நான்
எத்துணை ஆழமான வெட்டுக்கள்
உன் பார்வையில்

மறுமுறை
வாங்கிய கொசுவலையோடு
கதர்க்கடை கதவு தள்ளித் திறந்தேன்
எதிரில் நீ
எத்துணை எளிதாக வீழ்த்தினாய்
உன் வலையில்
ஒரு புன்னகையில்

இப்போது நாம்
ஸ்கூட்டியும்,ஹோண்டாவும் உரச
ஒரு சிக்னலில் நிற்கிறோம்
இன்னும் பன்னிரண்டு வினாடிகள்
இருக்கின்றன நம் நகர்வுக்கு

அதுவரை பொறுத்திராமல்
அலறிய வாகன ஒலிகள்
என்னை இடப்புறமும்
உன்னை வலப்புறமும் தள்ளி
சீறிப் பறந்தன புகை கக்கி...!

எத்துணை வலிமை மிக்க
ரணங்கள்
நம்மைச் சுற்றிலும்.........!

எழுதியவர் : சுஜய் ரகு (13-May-15, 9:38 am)
பார்வை : 134

மேலே