பைத்தியம் இங்கே யார்

... "" ""...

விரக்தியில் விழிமூடி பலநேரம்
விரசத்தின் துடிப்பில் ஒருநேரம்
கண்மூடிய தியானம் கணநேரம்
கைகொட்டி சிரிக்கும் சிலநேரம்
இவனா இங்கு பைத்தியம் !!!

சிந்தை சிதைந்திட்ட வாழ்வும்
வட்டமிட்டு சிரிக்கும் கூட்டம்
காலத்தால் வந்திட்ட மாற்றம்
சூழ்ச்சி உருவாக்கிய தோற்றம்
இவனா இங்கு பைத்தியம் !!!

உள்ளதையெல்லாம் இழந்து
ஆசைநிறை உள்ளம் மறந்து
வலுவிழந்து தேகம் கரைந்து
தன் உயிரை மட்டுமே சுமந்து
இவனா இங்கு பைத்தியம் !!!

பெற்றோருக்கு உணவளிக்கா
அனாதைகளாய் விட்டுவிட்டு
வாழும் வாழ்க்கை நிலைபெற
அன்னதானங்கள் செய்கின்ற
அவனே இங்கு பைத்தியம் !!!

தனக்கு தனக்கென்று தரணியில்
இருக்கும் இடமெல்லாம் சுருட்டி
இனியும் வேண்டுமென விரும்பி
எல்லா பொய்களும் சொல்லிடும்
அவனே இங்கு பைத்தியம் !!!

மலமும் மணத்தையும் பேதமறியா
மகளும் மனைவியும் பிரித்தறியா
உறவின் நெறிகளும் புரிந்தறியா
இச்சை தீர்க்கும் வழிமுறையான்
அவனே இங்கு பைத்தியம் !!!

என்றும் உங்கள் அன்புடன் ,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (13-May-15, 10:10 am)
பார்வை : 363

மேலே