வரம்பு

வெந்நிற வானில் முளைத்த
கருநிற நிலவு
உனது இரு கண்கள்...

கோபம் கொண்ட காதலியை
விட்டு விட்டு தொட்டுச்
செல்லும் காதலன்
உனது இரு இமைகள்...

வாய்வழி மொழியெனும் வாளினால்
வகுந்தெடுக்கப்பட்ட சிவந்த கனி
உனது இரு இதழ்கள்...

வேர் அறுந்து நகரும்
பச்சை மரம்
உனது இரு பாதங்கள்...

வர்ணிப்பதற்க்கும் வரம்பு
உள்ளதென்பதால் இதோடு
வாய்மூடிக் கொண்டேன்
என் காதலே.


செ.மணி

எழுதியவர் : செ.மணிகண்டன் (13-May-15, 12:33 pm)
Tanglish : varambu
பார்வை : 158

மேலே