கவிதையே உனக்காக ஒரு கவிதை

கவிதை எழுத தோன்றிய எனக்கு
முதலில் எழுத நினைத்தது உனக்காக தான்

நீ இல்லாவிட்டால்
உலகில் பிரம்மன் படைப்பே நின்றிருக்கும்!

உன்னால் தான் கருப்பு நிறத்திற்கு
மட்டும் ஒரு தனிப்பெருமை அது
எனக்காக நீ கொடுத்த சிம்மாசனம் - உன் கருவறை

அதன் பின்
நீ காட்டிய வெளிச்சம்
என்னை விண்ணுலகதிலும்
நட்சத்திரமாக ஜொலிக்க வைக்க காத்திருகிறது.............

விடியலும் உன்
மஞ்சள் முகம் பார்த்து மலர்கிறது - சூரிய உதயம்.............

நிலவு உனக்காக காத்திருகிறது
நீ சொரூட்ட வருவாய் என

இப்பொது எழுதுகிறேன்
கவிதை "அம்மா"
இந்த கவிதை கூட அழகாகிறது உன்னால்.............

எழுதியவர் : priyajose (13-May-15, 12:52 pm)
சேர்த்தது : ப்ரியஜோஸ்
பார்வை : 244

மேலே