என்னவென்று மனம் உணர - தேன்மொழியன்

என்னவென்று மனம் உணர
~~~~~~~~~~~~~~~~~~~~~~

பெண்மை
எனும் புதிரில்
அன்னை மட்டுமே
புரியும் புன்னகையாகிறாள் ...
இதர
புடவையும்
தாவணியும்
சுடிதாரும்
எதோ ஒரு வருடத்தில்
வருத்தம் வருடிய
நிஜமாகே நிற்கிறது ...நீள்கிறது ..

தோழியும்
அக்காவும்
தங்கையும்
அண்ணியும் ..ஏன் ..
அவர் , இவர் என
எவர் வரினும்
ஏதோ ஓர் இடத்தில்
பிரிவினை ....நெஞ்சம்
பிளக்க செய்கிறது ...
அன்னை அவளை தவிர...

இதில் ...
மனைவி ..
மறுக்க முடியா
மதி நுட்பம் ...
அன்னையை போல

- தேன்மொழியன்

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (14-May-15, 5:01 pm)
பார்வை : 165

மேலே