ஊர்க்கடிதம்
அன்புள்ள நண்பனுக்கு !
ஊர் நண்பன் சொல்லுவது
கடல் கடந்த. பயணத்தில்
உன்னை பார்த்ததற்கு இன்னுமில்லை
கடதாசி ஒன்று போடுகிறேன்
கவலையை குறைப்பற்கு
ஊர் புதினங்கள் ஊதாரியா போயிற்று
இயற்கையாய் திகழ்ந்த நிலம்
சுடுகாடாயிற்று
இரை தேடும் பறைவையினம்
இங்கில்லை
கரை தொடும் அலைக்கும்
சுதந்திரமில்லை
கலப்பு மணமுடிப்பில்
பலியாகும் எம்மினப்பெண்கள்
இது தான் உஸ்சிதம் மச்சான்
ஆலையடி கோயிலில உன்னவளைக்கண்டேன் மச்சான்
இளசுகள் போதைக்கு அடிமை மச்சான்
போற இடம் வார இடமெல்லாம்
அவன் மொழி முதலெழுத்து
போர்க்கோழி கூவயில மசக்கையிலகிடந்த மாக்காள்
மசக்கை தெளிவாக. மகா தலைவனை தேடுகின்றனர்
நாம் நினைக்காததெல்லாம்
நடந்தேறியது
நடக்கயிருப்பது
நம் பேசும் மொழிமாற்றம் நண்பா
முன்தினம் உன் அப்பாவை
போதையில் கண்டேன் மச்சான்
தலைவனின் பாடலோட
முனு முனுத்து போவதை
கோயிலிலே கும்பிட்டு தீபமெற்றிய விளை நிலத்தில்
வினாசகார படைகள்
கட்டப்பந்து அடித்தது ஓடித்திரிந்த வயலெலல்லாம்
படை முகாம்புயம்
பஞ்சாயத்து போடுறவனும்
பாதகன் பக்கம் நண்பா
கோயிலுக்கு போயிருந்தால்
அடி க்கிற காற்றில நம்ம மக்களின் அழுகை தான் கேட்கும்
நம்ம பக்கம் சாதகமாக பேச யாருமிலர்
உழைப்பாளி யெல்லாம்
நாடு நாடாய் அடிமையாக
கூட்டாளி நீ எப்போ
கூடி வாழ்ந்த மண்ணை பார்க்கப்போகின்றாய்?
தோல்வியென
துவண்டது போதுமடா
தோழ்வி ஒரு அவிப்பிராயமென
துள்ளி நாமும் எழுந்திடனும்
தேடிக்கிடைக்காத திரவியத்தை
தொலைத்விட்டு நிற்கின்றோம்
தீர்க்க தரிசி சொன்ன வார்த்தை நிகழ்கின்றது
எம் கண் முண்ணே
தொடரில்லா கவலைகள்
இன்னும் நிறையயிருக்கு
நெஞ்சு வலிக்கிறது
விழி நிரம்பி விட்டது
முடிக்கின்றேன்
சுக நலம் விசாரிக்க வில்லை
சோதனைக் கண்டத்தில் வாழும் நமக்கு.முக்கியமாக தோன்றவில்லை
நீ நலம் தானே?
இப்படிக்கு உனது மித்திரன்