மானம் கெட்டவர்க்கே மரியாதை அதிகம் மனச்சாட்சி கொன்றவர்க்கே பொருட்ச்செல்வம் குவியும்

மானம் கெட்டவர்க்கே மரியாதை அதிகம்
மனச்சாட்சி கொன்றவர்க்கே பொருட்ச்செல்வம் குவியும்
---------------------------------------------------------------------------------------
இரண்டில் ஓன்று
எதுவும் நடத்தும்;
இரும்ப பெட்டியும்
கரும்பாய் பேசும் !
விரும்பும் உறவும்
விலகி செல்லும்,
விட்டில் பூச்சியாய்
விளக்கை சுற்றும் ,
விசயம் உள்ளோரை
விலக்கி வைக்கும்,
விலையும் கொடுத்து
விருந்தும் வைக்கும்,
தப்பையும் தப்பாய் செய்து
தலையை நிமிர்த்தி
தாளம் போடும்!
அதிகாரம், ஒன்றே இங்கு
அதி-'காரம்' செய்யும்!
கோவில் கோவிலாய் சுற்றி வந்து,
கோடி பணத்திலே தேரும் இழுத்து,
யாருகாகவோ உருண்டு புரண்டு ..
இரும்பு பெட்டியில்
இருப்பைக்கூட்டும்!
சாட்சி மாறும்,
காட்சி மாறும்
மன சாட்சி மறைத்து
மனிதம் பேசும்?
மளிகைக் கடை பொருளாய்
மனமும் நினைக்கும்
நாய் விற்ற காசும் குறைப்பதில்லை ,
நா-நயம் தவறி சேர்த்த நாணயமும்
செல்லாது என்று சொன்னதில்லை
சேவிக்க நாமும் மறந்ததில்லை!
எல்லாம் இங்கு பணமே!,
இல்லாதவன் இயங்கும் பிணமே!
கல்லாத மூடன் கல்லூரிக் கட்டுவான் ..
கற்று தேர்ந்தவன் படம் நடத்துவான் !
எல்லாம் இருக்குது பூமியிலே
ஏக்கத்துடன் பார்க்குது சாமிகளே!
பணமே இங்கு பிரதானம்..
இருப்பவன் எடுப்பான் அவதாரம்.
கொடுத்து..
எடுத்து...
கூடி மகிழும் கூட்டத்தில்
விற்றோம்..
விற்றதால்
விலைகொடுத்து வாங்குகிறோம் !
தொலைந்தால் தேடலாம்...
தொலைத்தால்...
இனி..
அவர்க்கே வாழ்வு!
அவர் வாழ வாழ்த்துக்கள்
சொல்வோம்!
வேறு என்ன செய்ய ...

எழுதியவர் : ந. ஜெயபாலன், திருநெல்வேலி (14-May-15, 11:53 pm)
சேர்த்தது : na.jeyabalan
பார்வை : 172

மேலே