காதல் கப்பல்
வீதியெங்கும் வீசும்
தூசிக்காற்றில் கண்கூசிக்
கொண்டே கண்டாலும்
உன் முகம் கவிதையாகத்தான்
தெரியுதடி...
யார் செய்த யாழோ நீ..?
என் விரல் உன்னைத் தீண்டுகையில்
இசையாகிவிடுகின்றாய்...
என் மழை உடைக்கும்
குடையும் நீ..
உன் மார் மறைக்கும்
உடையும் நான்...
அவிக்கும் நெல்லாய்
தவிக்கும் தருணம் வரும்
உந்தன் பிரிவினில்...
வெறும் சதை நரம்போடு
சாந்தமாகத் திரியும்
எந்தன் உடலை கரை சேர்க்க
காதல் கப்பல் என்று வரும்
உந்தன் உயிரினில்...
செ.மணி