விழிகள்
வண்ணங்கள் என்றால்??
வடிவம் ஒன்றும் இல்லை என்றேன்..
வடிவம் என்றால்??
உதாரணமாய் உருண்டை என்றேன்..
உற்று பார்த்தான்
பார்க்க முடியவில்லை,
உருவி பார்த்தான்
உணர முடிந்தது..
பின்னே
நானும் உணர்ந்தேன்
சிறுபிள்ளைதனமான கேள்விகள் இல்லை
சிறு பிள்ளை முதலே
அவன் தேடும் பதில்கள் என்று..
உளியால் செதுக்கப்பட்டவன்
ஒளியால் செழிக்கப்படவில்லை
ஒளி வீசா
மின்மினியாய்
அவன் விழிகள்..
உணர்வுகளே அவனுக்கு
உரித்தான மொழிகள்..
பாவப்பட்ட பூவுலகில்
பார்பதற்கு உசிதமாய்
ஒன்றும் இல்லை..
வெறும் பனிப்போரும்
பஞ்சப்போரும் தான் உண்டு..
ஒளி வீசும்
விழிகள் யாவும்
இங்கு
விதைகள் தான்..
புதைபடாமல்
விதைக்கப்பட்டால்...