வாழ்வே மாயம்
நொடிக்கு நொடி மாறும் காட்சிகள்
மறுநொடி மர்மம் அவிழ்ப்பவன் யாரோ ?
சரியும் தவறும் மாறும் கோணங்களாய்.........
விருப்பும் வெறுப்பும் சூழலின் அளவீடுகளாய்.......
திருப்பமென நினைக்கையில் படமெடுக்கும் அரவு
தீடிரென வரும் திருப்பத்தில் வாழ்வின் திசைக் காட்டி ...
அறிவின் எல்லை தொட ஆயுள் முடியும்
எட்டிய அறியும் கிட்டாக்கனியாய் .................
எட்டா அறிவோ உலக மாயையாய்...............
இல்லாதது உள்ளது
உள்ளது இல்லை
மாறுபடும் மனங்கள்............
வாழ்வின் புதிரில் இறப்பே முடிவு
இறந்தபின் வாழ்வு மீண்டும் புதிராய்........
யார் கொடுத்த வாழ்க்கை யாருக்கும் தெரியாது
கொடுத்ததை எடுத்தவன் எனதேன்றான்...........
பைத்திய காரன் தெளிவாய் சிரிக்கிறான்
சிந்திக்கும் மனிதன் பைத்தியம் ஆகிறான்.....