மனங்கவர் காதலி - 7
![](https://eluthu.com/images/loading.gif)
நல்லவர் எங்கெனத் தேடினேன் நாற்புறம்!
வல்லவர் இங்குளர் என்றனர் யாவரும்!
பல்லவர், பாண்டியர், மேற்பல மன்னர்போல்,
நல்லதில் உள்ளரோ? தேடினேன் தேடினேன்...!
மனங்கவர் காதலி, மண்டையில் குட்டினை..!
“மண்ணதை ‘உள்’ளெனும் உறையினுள் வைத்தவா,
தின்பதே வாழ்விலோர் பெருந்தொழில் என்பதாய்
மண்புழுப் போலவும் வாழ்வினைக் கழித்தனை!
நல்லதோ ரில்லமா முள்ளதில் ஒளிபுக,
நல்லவர் எங்கெனில், இங்குளாய்” என்றனை!
நல்லது….காதலி!
கன்னத்தில் மொய்த்து - நல்
கண்பார்வை தந்திட்டாய்!
“வாழ்க நீ!” என்றிட்டேன், ஓடினை....நாணமோ?!
*****************************************************************************
சுந்தரேசன் புருஷோத்தமன்