இன்னும் பயிற்சி வேண்டுமோ

உனக்கான உரையாடல்களில்
நான் விட்டு கொடுத்திருக்க வேண்டும்தான்
உன் புன்னகைக்கு புன்னகைத்திருக்க வேண்டும்தான்
உன் கண்ணீருக்கு கலங்கியிருக்க வேண்டும்தான்
உன் புரிதல்களை ஆராய்ந்திருக்க வேண்டும்தான்
உன் பூக்களை கூட சுமந்திருக்க வேண்டும்தான்
என்பால் திசைதிருப்ப முயன்றிருக்க கூடாதுதான்
எனக்கான நேர ஒதுக்கீட்டுக்காக விண்ணப்பித்திருக்க கூடாதுதான்
நீ எனக்கானவள் என்பதை உணர்ந்ததோடு விட்டிருக்க வேண்டும்தான்
உனக்கும் உணர்த்த முயன்றிருக்க கூடாதுதான்
இதற்கெல்லாம் மேல்
இஞ்சி தின்ற குரங்கை
இப்படி கவிதையென்ற பெயரில்
எல்லாத்தையும் உளறி கொட்டியிருக்க கூடாதுதான்
இன்னும் பயிற்சி வேண்டுமோ?

எழுதியவர் : நவநீ கோகுல் (21-May-15, 12:04 pm)
சேர்த்தது : navneegokul
பார்வை : 80

சிறந்த கவிதைகள்

மேலே