40 பெரிசா இல்ல 100 பெரிசா
40% பெரிசா இல்ல 100% பெரிசா
கொள்ளுப்பேரன்:::::
===தாத்தா நான் நாலு பாடத்திலெ 100/100 மார்க் ====வாங்கியிருக்கேன். உங்க காலத்திலெ எங்கள மாதிரி சாதனை படைக்க முடிந்ததா?
கொள்ளுத்தாத்தா ( 95 வயதுக்கு மேற்பட்டவர்::::::::::
==== அட பேரா, எங்க காலத்திலெ மாநில அளவில் கணிதத்திலெ மட்டும் தான் ஒரு சிலர் 100/100 வாங்குவாங்க. இப்ப தேர்ச்சிவிகிதம் 80% க்கு மேலே நிக்குது. எங்க காலத்திலெ அது 20% தான் இருக்கும். எங்க காலத்திலெ மொழிப்பாட ஆசிரியர்கள் மட்டுமில்லாமல் கணக்கு, அறிவியல் சமூக அறிவியல் பாடங்கள நடத்தற ஆசிரியர்கள் கூட எழுத்துப் பிழைஇலக்கணக் பிழைகள் இருந்தால் மதிப்பெண்ணைக் கொறச்சுப்போட்டுடுவாங்க. ஒரு பாடத்திலெ தவறினாக் கூட எல்லாப் பாடங்களுக்கும் தேர்வு எழுதவேண்டும். முதல் தடவ தவறினா மீண்டும் தேறினாலும் கல்லூரியில் சேர்ந்து படிக்க முடியாது. இலவச தேர்ச்சி பற்றி கனவு கூடக் காண முடியாது. இப்ப இருக்கற மாதிரி சலுகை எல்லாம் கிடையாது, எஸ்.எஸ்.எல்.சி படித்தவனைக் கற்றவனாகக் கருதப்பட்ட காலம். இப்ப எழுதப் படிக்கத் தெரிந்தபட்டாதரிகளே அதிகம் . நீ சொந்தமா ஒரு கட்டுரையைப் பிழையில்லாம எழுதிக் காட்டு பாக்கலாம். என்னுடைய 40% பெரிசா இல்ல பெரிசா உன்னுடையா 100% பெரிசான்னு பாக்கலாம்.
=======
குறிப்பு::::::::: மதிப்பெண் அளிப்பதிலும், தேர்ச்சி விகிதத்தை உயர்த்துவதிலும் தாராளமயமாக்குதல் கொள்கை நடைமுறையில் இருப்பதால் இன்று பல துறைகளிலும் முதுகலைப் பட்டம் பெற்ற பலர் மொழி அறிவில் மிகவும் பின் தங்கி இருக்கிறார்கள். அதனால் தான் அய்.ஏ.எஸ் ஐ.பி.எஸ் போன்ற தேர்வுகளில் தமிழர்கள் பின் தங்கி இருக்கிறார்கள். நன்றாகப் படிப்பவர்களும் மென்பொருள் துறைக்கு ஓடிவிடுகிறார்கள் (அங்கு சம்பளம் அதிகம் அரசியல்வாதிகளின் குறுக்கீடும் இல்லை என்பதால்.)