மனதுக்குள் ஜோக்ஸ்
.....................................................................................................................................................................................................
1
ஏண்டா, நான் உன் நண்பன்தானே? உனக்கு தெலுங்கு தெரியும்கிற விஷயம் புது லேடி மானேஜர் சொல்லித்தான் எனக்கு தெரிய வருதுன்னா கஷ்டமா இருக்குடா...
நண்பன் (மனதுள்) ஹூம்.... எனக்காவது தெலுங்கு தெரியறதாவது? வந்திருக்கிறது தெலுங்கு மானேஜர்னு தெரியாம தொணதொணண்ணு கேள்வி கேட்ட லேடியை இரேண்டின்னு சொல்லிட்டேன். அவங்க உச்சி குளிர்ந்து போய் பில்ட் அப் கொடுத்துட்டாங்க... !
....................................................................................................................................................................................
2
ஓவியர்: உங்களைப் போன்ற ஒரு ரசிகரை நான் பார்த்ததேயில்ல.... ! நான் வரைந்த வீணை ஓவியம் அவ்வளவு நல்லாவா இருக்கு?
ரசிகர்: (மனதுள்) நாசமாப் போச்சு.. நான் சாவியைத்தான் வரைஞ்சிருக்கார்னு நினைச்சுட்டிருக்கேன்.. !
............................................................................................................................................................................................
3
மாமியார்: இன்னிக்கு நீ வச்ச ரசம் ரொம்ப நல்லா இருந்தது... !
மருமகள்: (மனதுள்) கொதிக்கிற ரசத்தில் தவறுதலா மகன் மௌத் வாஷ் மொத்தத்தையும் ஊத்திட்டான்... ! கீழே கொட்டப் போன சமயம் பரிமாற நீங்க எடுத்துட்டு போயிட்டீங்க.... !
...............................................................................................................................................................................................
4
நோயாளி : டாக்டர்! விலை அதிகம், வெளிநாட்டு மருந்து, ஜீரா மிட்டாய் மாதிரி இருக்கும்னு சொல்லி நீங்க கொடுத்த மாத்திரைங்களை சாப்பிட்டு என் உடம்பு குணமாயிடுச்சு.... !
டாக்டர் : (தனக்குள்) ஜீரா மிட்டாய் மாதிரி இல்ல; ஜீரா மிட்டாயேதான் !
....................................................................................................................................................................................
5
பெண் வாடிக்கையாளர் : ஃபுல்லி ஆட்டோமாடிக் வாஷிங் மெஷின்னா தானா துணி காயப் போட்டு அயர்ன் பண்ணி மடிச்சும் வச்சிடுமா?
கடைக்காரர்: (தனக்குள்) புருசன் ஞாபகமா இருக்காங்க !
....................................................................................................................................................................................