500க்கு 500 போச்சே

ஏண்டி நான் 4 பாடத்திலே 100க்கு 100 மார்க் வாங்கியிருக்கேன். நான் என்ன பாவம்டி செஞ்சேன்? எல்லாப் பாடங்களையும் நல்லா மனப்பாடம் பண்ணி அழகாத் தானே எழுதினேன். ஒரு பாடத்திலே மட்டும் தொண்ணூத்தொம்பது மார்க். அதிலேயும் 100க்கு 100 வாங்கியிருந்தா நான் மாநில அளவிலே முதல் மாணவியா வந்திருப்பேனே. அந்தப் பேப்பரைத் திருத்தின வாத்தியாரு ரொம்பக் கஞ்சம்பிடிச்சவரு போல இருக்கு. ஒரு மார்க்கைக் கொறச்சுப் போட்டு என்னப் பழி வாங்கிட்டாரே மனுஷன்.

எழுதியவர் : மலர் (22-May-15, 11:37 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 147

மேலே