திணைக்காதல்

சுகம் தந்த நாட்கள்
சொல்லி வச்ச காதல்
உன்னை கண்ட தோடு
உயிரை விட்டு தேட
உள்ளம் சொன்ன உண்மை
உயிரின் வலி பேச
உதடு வரை காதல்
ஊதா கலர் ரிப்பன்
அட்ட கத்தி பேச்சில்
அசந்து விட வேண்டும்
நாம் சேர்த்த பாதை
இன்றென்னை பார்க்க
வழியெல்லாம் கண்ணீர்
சிந்துதடி பெண்ணே

மழை விட்ட போதும்
மண் நீரை தேட
ஏமாற்றம் என்று
குயில் கத்தி பாட
கரையோரம் நானும்
கடலோரம் நீயும்
விரல் பேசும் காதல்
விடை காணும் காதல்
விதி இல்லை என்றும்
வினை நெஞ்சில் பாய
முள் மீது ஈசல்
முன்பே வா என் அன்பே
முத்தங்கள் மூழ்க
முதல் பார்வை தீண்ட
மடிந்தேனே பெண்ணே.

எழுதியவர் : நா ராஜராஜன் (22-May-15, 3:10 pm)
பார்வை : 345

மேலே