நிலைக்கோ புரத்து நிழல்

நான்: வணக்கம் நண்பரே
நண்பர்: வணக்கம் ஐயா, உங்கள் சிவன் அனலாய் நின்ற போது
பிரம்மாவும், விஷ்ணுவும் அடி,முடி தேடினார்களாமே அது என்னய்யா கதை?
நான் :நீங்கள் தஞ்சாவூர் போயிருக்கிறீர்களா?
நண்பர்:ஆம்
நான்: பெரிய கோயில் பார்த்திருக்கிறீர்களா
நண்பர்; ஆம் பார்த்திருக்கிறேன்,பெரியகோயில் ஆம் ஆம் பெரிய கோயில்
நான்: நந்தி
நண்பர்:மிகப் பெரிய நந்தி, அதிலென்னய்யா விஷேசம்
நான்: ஆமா அவ்வளவு பெரிய கோயில் கோபுரம் பார்தீங்க அதன்
நிழலைப் பார்திருக்கீங்களா?
நண்பர்:?...?...?
நான்: நிழலையே அடிமுடி காண முடியாத நாம்
தழலை அடிமுடி காண முடியாததொன்றும் அதிசயமில்லையே

அத்தன் அடிமுடியை அன்றயன்மால் தேடினாற்போல்
நித்தம் பெருவுடையார் கோயில் நிழல்தேடி
பக்தர் அதிசயத்தார் பார்.


விண்ணிலே கோளனுப்பும் மேனாட்டுக் காரரும்நம்
மண்ணில் வியக்கு மதிசயங்கேள் –கண்ணில்
கலைக்கோ புரங்கண்டார் தஞ்சையிலே தேடும்
நிலைக்கோ புரத்து நிழல்.

ஆம்
விண்ணிலே கோளனுப்பும் மேனாட்டுக் காரரும்
மண்ணில் வியக்கும் அதிசயங் கேள்
மண்ணில் வியக்கு மதிசயங்கேள்
மதி சயங்கேள்…அறிவின் வெற்றியைக்கேள்
உலகில் எல்லாப் பொருட்களுக்கும் நிழல் இருக்கிறது
தஞ்சை கோபுரத்திற்கு? நிழல் இருக்கிறதா ? இல்லையே
வியக்கும் அதிசயம்தானே
வியக்கும் மதிசயம்தானே

எழுதியவர் : சு.ஐயப்பன் (23-May-15, 11:28 am)
சேர்த்தது : சு.அய்யப்பன்
பார்வை : 114

மேலே