விண்ணைத் தொடலாம்

மண்ணில் விதையாய் விழுந்தேன்
விண்ணைத் தொடும் விருட்சமாய் உயர்ந்தேன்!
இடையில் பட்ட இடரெல்லாம்
வேர்கள் தாங்கிய வரங்கள்!
புயலும்,வெயிலும்,பூகம்பமும்
தாண்டி நிலைக்க
உறுதியே உரமாகும்!
நீங்களும் உள்ளத்தில்
மன உறுதியும்,நம்பிக்கையும்
வளர்த்திட்டால்
விண்ணைத் தொடலாம்!