சிறு துளி பெரு வெள்ளம் பழமொழி கவிதைகள் - பாகம் -1

சில துளிகள்
என் வேரில்
சிந்தினீர்
பல ஏரிகள்
மழையால் நிறைந்திட!
சிறு மண்ணில் வளர
இடம் தந்தீர்
மண்ணே வளம் கொழிக்க!
சிதறும் நீரை
மண்ணும் ஈர்த்தது
பூமித்தாய் குளிர
மேகத்தாய் மலர!
சிறு துளியும்
பெரு வெள்ளம் ஆகும்!