சிறகுதிர்ந்த பறவையாய்
பறவையாக நானும்மாறி
அந்த வானம்தொட ஆசைக்கொண்டேன்
பூமியெங்கும் நான் பறந்து
புதுக்கவிதைப்பாட ஆசைக்கொண்டேன்
காதல் செய்தால் வானில் பறக்கலாம்
படித்ததோ கேட்டதோ நினைவிலில்லை- ஆனால்
பறக்கும் ஆசையோ எனை விடவில்லை
எங்கிருந்தோ வந்தாளவள்
எனைக்கூட்டிச் சென்றாளவள்
காதல் சிறகை கட்டிவிட்டு
வானம் பறக்கச் செய்தாளவள்-என்
வாழ்க்கை மறக்க செய்தாளவள்
கனவுலகிலும் நனவுலகிலும் நான்
காதல் வானில் பறந்திருந்தேன்
காலை மாலை மறந்திருந்தேன்
என்னடி இது விளையாட்டு?
இதுதான் என் முதல்பாட்டு
பாடல்வரி அழிக்கின்றாய்- என்
சிறகிறண்டை முறிக்கின்றாய்
என் இதயத்தில் முளைத்திருந்த சிறகிரண்டை கேட்கின்றாள்
காற்றில் ஊதி விளையாட காதல் சிறகை பிய்க்கின்றாள்
சிறகுதிர்ந்த பறவையாய் செத்து நான் போகாமல்
தினமுமவளை பாடுகின்றேன்
சிந்தையால் அவள் நினைவெழுதி
தினமுமவளை தேடுகின்றேன்
இறக்கும் தருவாயும்
என் இதயம் கேட்கும் உன் உறவைதானடி
இறகிரண்டை இழந்தாலும்
இப்போதும் நான் பறவைதானடி
ஆம்..
"சித்திரைக் குயிலாய்"
நித்திரையில்லாமல்
"உன் நினைவு கிளைகளில்"
இப்போதும் நான் பறவைதானடி...

