உன் நினைவில் எழும் கிறுக்கல்கள் 555
என்னுயிரே...
மழை தூறும் நேரங்களில்
முளைக்கும் காளான்கள் போல...
எனக்குள் உன் நினைவுகள்
எப்போதெல்லாம்...
அருவியை போல்
ஊற்று எடுக்கிறதோ...
அப்போதெல்லாம் முளைத்த
காளான்கள்தான் இந்த கிறுக்கல்கள்...
காளான்களின் ஆயுள்
ஒருநாள்தான்...
உன் நினைவுகள் வரும்
ஒவ்வொரு நிமிடமும்...
என் ஆயுள் முடிந்துகொண்டுதான்
இருக்கிறது...
கிறுக்கலும் நிற்கும்
ஒருநாள்...
உன் நினைவுகள் என்னில்
மறையும் அந்த நிமிடம்.....

