நான் மகானல்ல
நான் மகானல்ல
எனது ஆசைகளையெல்லாம்
படடியலிட்டேன் - அதில்
கடைசியில் நின்றது
புத்தனாகும் ஆசை
எல்லா ஆசைகளையும்
துறந்துவிட்டு
புத்தனாவதா -இல்லை
எல்லோர் ஆசைகளையும்;
நிறைவேற்றிவிட்டு
புத்தனாவதா என்ற
மனக்குழப்பம் என்னுள்ளே.
இருப்பவன் துறந்தான்
புத்தனானான்
இல்லாதவன் துறப்பதில்
என்ன அர்த்தம்
எல்லோர் ஆசைகளையும்
நிறைவேற்றினேன்
இறுதியில் புத்தனாகும்
ஆசையை மட்டும்
துறந்தேன்
புத்தனாவது எளிது
மனிதனாக வாழ்வது
கடினம் என்ற ஞானம்
எனக்குப் பிறந்தது!
ஜெ.பி

