மரணத்தின் வாழ்வு
தட்டுபடாத வாழ்வின் சந்தோசங்கள் அவள் வாழ்க்கையின் மரணம் அந்த துக்கத்தில் புதைக்கப்பட்ட அழுகையாக சிரித்துக் கொண்டிருக்கிறது....
நெல் விற்ற பணத்தில் அந்த சவப்பெட்டி அதிருப்தியுடன் அவளை அணைத்துக் கொண்டிருந்தது...
போர்த்தப்பட்டிருந்த பூக்களின் கண்ணீர் துளிகள் என்னை ஏதோ செய்துக் கொண்டிருக்க....
நான் அவளைக் கண்டேன் .......
துக்கத்திற்கு வந்தவர்களுக்கு தேநீர் கொடுக்கும் பதுமையின் புன்னகையில்.......
அருகே நகர்ந்தேன் ......
அவள் தொலைந்துப் போய் கொண்டிருக்கிறாள்....