புத்தக மூட்டையின் புலம்பல்

என்னை விரித்தே..
உன்னைப் படித்தாய்
விடிந்தது உன்வாழ்க்கை..
இருட்டில் இன்றுநான்

புத்தகப்புழு பெயரெடுத்து..
மணிமகுடம் கண்டவனே-என்னை
புழுமேய மூட்டைகட்டி..
பரண்மேலே எறிந்ததேன்

விடியலைத் தந்தவர்க்கு..
இருளையே பரிசளிக்கும்
அறியாமை மனிதமனம்..
மாற்றிடவே பிறப்பெடுத்தேன்
கிடைத்தது பரிசெனக்கு..
இருட்டில் இன்றுநான்!

பகுத்தறிவுப் பாடஞ்சொல்லி..
பக்குவஞ்செய்த என்னை
பயன்பட மாட்டேனென்றா..
பரண்மேலே பாடஞ்செய்தாய்.?

உனைப்போன்ற இன்னொருவன்..
எனைத்தேடி அலைகின்றான்
அவனிடம்நீ எனைச்சேர்த்து..
அவர்வாழ்வில் ஒளியேற்று..

பிறர்க்குஉதவாக் கல்விகொண்ட..
நீயுமென்போல் மூட்டைதானே மனிதா?

எழுதியவர் : moorthi (3-Jun-15, 1:14 pm)
பார்வை : 54

மேலே