வளரும் பொறியாலன்

சானை பிடித்த மூளையால்
சந்திரனை தொட்டோம்
வாலை தீட்டி ஓலையனுப்பி
கோளை செய்தோம்

கண் கண்ட நிலவில்
கையழைக்கும் ஒருவர்
புவி மட்டும் போதாது
புதனிலும் வசிப்போம்

எட்டடியும் கேட்கா குறலை
விண் வரை அனுப்பி
வேரொரு மண்ணிலும் கேட்டோம்

பச்சை கட்டையும் மிதக்கா நீரில்
இரும்பு வண்டி ஓடுது
இலையும் கூட நிற்கா காற்றில்
இயந்திர வண்டி பறக்குது

நம் தந்திரத்தால் பெற்ற இயந்திரங்கள்
எத்தனை எத்தனை

பொறியாலனே இன்னும் தீட்டு மூளையை
தொடா கோளையும் தொட்டுவிடலாம்
அறியா இயந்திரத்தையும் அறிந்து விடலாம்
இனி வரும் காலங்களில்.

எழுதியவர் : ஆ.சத்தியபிரபு. (3-Jun-15, 1:20 pm)
பார்வை : 64

மேலே