இந்தியா தான் எங்களுக்கும் நாடு

கண்ணீரில் மிதக்குது பூமி.... அட
எங்கிருக்க நீ தான் சாமி...
நாட்டுக்குள்ள எங்க ஊரு சேரி... கொஞ்சம்
எட்டி பாரு கிடைக்கும் நூறு சேதி...
அன்னனைக்கு உழைச்சா சோறு..
மழை பெஞ்சா வீதியெல்லாம் சேறு...
கோடை காலம் கொள்ளி வைக்கும் பாரு...
இந்தியா தான் எங்களுக்கும் நாடு....
தண்ணி வேண்டி காத்திருக்கா பொம்பள....
தண்ணி கட முன்னால ஆம்பள...
எதிர்காலம் எங்களைத்தான் நம்பல ...அட
எதிர்நீச்சல் போட இனி தெம்பில்ல......
வறுமை வாட்டுது, வயச கூட்டுது
வாழ்க்கை பறபறக்கும் ரயிலு...
பணந்தான் ஆட்டுது , பந்த போல உருட்டுது
இலக்கே எங்களுக்கு கூழு..
சாக்கடையும் பூக்கடையும் ஒண்ணுதான்....
கொசு வளர்க்கும் பண்ணை இந்த மண்ணு தான்....
வெட்டி பேச்சு திண்ணை இங்க இல்லைதான்....
வெட்டியான் வேலை கூட தில்லுதான்....
சாரங்கட்டி தொங்குவோம் கயிறுல...
சாவப்பாத்து பயப்பட தெரியல...
சங்கடந்தான் ரத்தம் எங்க உயிருல
சரித்திரத்தில் எங்களுக்கு பெயரில்ல .....
கவிஜி