ஏங்கும் சிறுமனம்
தத்தளிக்கும் நெஞ்சம், தத்தளிக்கும் நெஞ்சம்
கரை சேருமோ ............?
விதி பதில் கூறுமோ ...............?
பிறவி அதை தந்த
அக்கருவும் எங்கே ..............?
அதன் வரவை எதிர் பார்க்கும்
சிறு விழிகள் இங்கே .............
மடி தேடுதே .............
மனம் வாடுதே
தப்பை நீ கட்டி வீசி சென்றாய் இனி
குப்பைத் தொட்டி என் தாயும் என்றாய்
வாடி போன மனதிலே இனி வாசம்
என்று வீசுமோ .........?
கூடி வாழ்ந்து சுகம் பெற ஒரு
கூடு என்று தோன்றுமோ ............?
காடு மேடு தேடி பார்க்க
கால்கள் என்று வளருமோ ...........?
கடவுள் பிள்ளை என அழைத்தார் இங்கே
கடவுள் அவர் எங்கே அதை மறைத்தார் இங்கே
பாசம் நேசம் என்பதன் அர்த்தம்
என்று கிட்டுமோ ..........?
பாதை தேடி போகையில்
அனாதை எந்தன் பட்டமோ ............?
மேதை வாழும் உலகமே இதில்
எந்தன் மீது குற்றமோ ............?
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
