பொண்ணுகள கேலி பண்ணும்
பொண்ணுகள கேலி பண்ணும், ஆண்களே கேளுங்க,
நாங்க மனசுல, சேலை கட்டுன
மாடர்ன் பொண்ணுங்க.. !
ரோட்டுல நக்கல் பண்ணும் ஆண்களே சொல்லுங்க,
உங்க தங்கச்சியே, கிண்டல் பண்ண
பையன் வார்டு நம்பர் என்னங்க.!?
உங்க கண்ணோடு, கண்ணு பாத்தா
வெட்கம் போச்சின்னு இல்லங்க.. !?!
அப்பவாது, வேறுபக்கம் பார்ப்பிங்கன்னு நெனைப்புங்க..!
பாகிஸ்தானு போக கூட, பயம் எல்லாம் இல்லங்க. !
பஸ்ல போக சொன்னா,
பைத்தியம் பிடிக்குதுங்க.. !!
உங்க அக்கா தங்கச்சியே, அன்பால அணைக்கிறீங்க..!
அடுத்தாத்து பொண்ணுனா
வம்புக்கு இழுக்கிறிங்க.. !!
ஆடு, மாடு வாங்க கூட, காசு குடுக்கிறீங்க..!!
மனுசபொண்ணை கட்டிக்க
காசு ஏன் கேக்குறீங்க!?
பொண்ணை பொன்னா, பார்க்கும் ஆண்களும் இருக்காங்க.. !!
அருந்த வாலுங்களும், கொஞ்சம்
அவங்கள பார்த்து திருந்துங்க.. !!
-வெறுப்புடன்..