புள்ளே வாழ்க

வலசை போகும் பறவைக்கு
****வசிக்க வீடு கிடைக்கலையோ ?
அலகில் குச்சிக் கவ்விப்போய்
****அழகாய்க் கூடு கட்டிடுவாய் !
பலமாய்க் காற்று அடித்தாலும்
****பழுது நேரக் கூடாது !
நிலமும் நடுங்கும் அஞ்சாதே
****நிலையும் மாறும் கலங்காதே !

இலக்கை அடைய வான்வழியே
****இரவும் பகலும் பறந்தாயோ ?
சிலவர் கண்டால் ஒதுங்கிவிடு
****சிறகை விரித்தே ஓடிவிடு !
நலமாய்த் திரும்பி வந்திடுவாய்
****நடுக்கம் வேண்டாம் கவலைவிடு !
புலமும் பெயர்ந்து சென்றாலும்
****புள்ளே! வாழ்க பல்லாண்டு !

( சிலவர் - வேடர் )

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (7-Jun-15, 9:51 pm)
பார்வை : 74

மேலே