ப்ரியமான தோழி

என் கவியால் வந்த ஒரு சொந்தம்,
உன் பெயரோ அழகான சந்தம்...!
உன் அன்பு நீர்வீழ்ச்சி தானே-அதில்
தினமும் நனைகிறேன் நானே...!

நாணம் என்பதே இன்று
அழிந்து போனதே என்று,
நாளும் கூறினேன் நானே-இன்று
நானும் மாறினேன் தானே...!

அன்பு வலையை நீ வீச-அதில்
நான் மாட்டிக் கொண்டேனடி...!
பெற்றத் தாயை போல பெரும் அன்பை
நான் உன்னில் கண்டேனடி...!

உனைக் காணவில்லை நான் நேரில்
உனைப் போல யாருமில்லை பாரில்...!
பல பெண்ணில் இல்லையடி உண்மை
நான் உன்னில் காண்கிறேன் பெண்மை...!

உன் கனவு நிறைவேறவேண்டும்
உன் கவலை கரைந்தோடவேண்டும்...!
பெரும் இலக்கை நீ தூக்கிச் செல்லு-என்றும்
துணிவின் துணையோடு வெல்லு.....




இக்கவி இலங்கையை சேர்ந்த என் முகநூல் தோழிக்கென எழுதியது..

எழுதியவர் : அகத்தியா (11-Jun-15, 4:38 am)
பார்வை : 273

சிறந்த கவிதைகள்

மேலே