வெளிச்சமாயிருக்கிற இருள்

ஆற்றின் வடுக்களை கடக்கும்போதெல்லாம்
புண்ணாகி வலிக்கிறது நெஞ்சம்
நடுநிசி சுடுகாட்டை கடப்பதுபோல்
தானாக வருகிறது அச்சம்.......

புரண்டு வந்த வெள்ளம் எங்கே - அதில்
திரண்டு வந்த மீன்கள் எங்கே
வறண்டு போன நதியிலும் -மணல்
சுரண்டுதிங்கே ஒரு கூட்டம்

ஆற்றங்கரை ...
மனித நாகரீகத்தின் தொட்டிலாம்
கடைசி உறக்கத்தின் கட்டிலாம் ....

எழுதியவர் : (11-Jun-15, 5:57 pm)
பார்வை : 96

மேலே